இலங்கை அணி - 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக, ஷாய் ஹோப் 115 ரன்களை குவித்திருந்தார்.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக இசுரு உடானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ (50) - திமுத் கருணாரத்ன (52) ஜோடி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 111 ரன்களை குவித்து சென்றது.

அடுத்து களமிறங்கிய குசல் பெரேரா 42 ரன்கள் குவிந்திருந்த நிலையில் கீமோ பால் பந்து வீச்சில் ப்ராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் பெரியளவிற்கு சோபிக்க தவறியதால், இலங்கை அணி தடுமாற துவங்கியது.

ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய வனிண்டோ ஹசரங்கா 42 ரன்களை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இலங்கை அணி - 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி
Reviewed by Author
on
February 23, 2020
Rating:
No comments:
Post a Comment