இரவில் படுப்பதற்கு முன் இந்த பானங்களை குடித்து வாருங்கள்... தொப்பை குறையுமாம்!
தொப்பை நம் அழகை மட்டும் கெடுப்பதில்லை நம் உடல் நலத்தையும் சேர்த்து கெடுத்து வருகிறது.
தொப்பை இருந்தால் உங்களால் வேகமாக நடக்க முடியாது, மூச்சிரைக்கும், பிடித்த ஆடைகளை போட முடியாது, பிடித்த உணவுகளைக் கூட உண்ண முடியாது.
இதனை குறைக்க கண்ட கண்ட டயட்டுகள், எடைகுறைப்பு பானங்கள், ஜிம் போன்றவற்றை தான் மேற்கொள்ளுவதுண்டு.
இதிலிருந்து எளிதில் மீள வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதில் தொப்பையை குறைக்க முடியும்.
அந்தவகையில் தொப்பையை குறைக்கும் எளிய அற்புத பானங்கள் பற்றி இங்கு பார்ப்போம். இந்த பானங்களை இரவில் குடிப்பதனால் தொப்பை படிபடியாக குறையும்.

- 1 கைப்பிடியளவு பார்சிலியில்1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் போட்டு இரவில் சாப்பிட்ட பிறகு குடித்து வாருங்கள்.
- தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் 1/2 டீ ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து பிறகு வடிகட்டி 1 டீஸ்பூன் தேன், 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- 1/2 கப் அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது அன்னாசிபழ சாற்றை வடிகட்டி அதில்1 டீஸ்பூன் பட்டைத்தூள், கருப்பு உப்பு, 1/2 லெமன் சாறு சேர்த்து இரவில் தூங்கச் செல்லும்முன் குடித்து வாருங்கள்
இரவில் படுப்பதற்கு முன் இந்த பானங்களை குடித்து வாருங்கள்... தொப்பை குறையுமாம்!
Reviewed by Author
on
February 23, 2020
Rating:
No comments:
Post a Comment