பெண்களே! மாதவிடாய் காலத்தில் இந்த 3 தப்பை மட்டும் செய்து விடாதீங்க
வயிறு உப்புவது , மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு , அஜீரண கோளாறுகள், உயிர் உறுப்புகளில் வலி, உடல் அசதி, தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.
மேலும் வயிற்று வலி, இடுப்பு வலி, கை, கால் மற்றும் மார் வலிகளை இது தருவதால் அந்த 3 முதல் 6 நாட்கள் வரை பெண்களை பாடாய்ப்படுத்தி விடுகின்றது.
அதுமட்டுமின்றி மாதவிடாயின் போது நாம் செய்யும் செயல்கள் சில நேரங்களில் நம்மை மேலும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது.
அந்தவகையில் தற்போது மாதவிடாய் காலத்தின் போது பெண்கள் செய்யவே கூடாத செயல்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
உடலை வருத்தி வேலை செய்யாதீர்கள்
உங்களது உடலை வருத்தி எந்தவொரு கடின வேலையைச் செய்தாலும் அது ரத்த போக்கை அதிகரித்து உங்களை மேலும் பலவீனமடைய செய்யும். அதிக சிரமத்துடன் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது.உணவை தவிர்க்கக் கூடாது
தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதன் மூலமே ரத்த போக்கினால் உங்கள் உடல் இழக்கும் சத்தினை உங்களால் திரும்பப் பெற முடியும். அதனால் உணவைப் புறக்கணிக்காதீர்கள்.நாப்கின்களை குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் மாற்ற வேண்டும்
மாதவிடாய் காலத்தின் போது நாப்கீன்களை உபயோகிப்பவர்கள் என்றால் நிச்சயம் 4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கீன்களை மாற்றிவிட வேண்டும்.வெளியேறும் ரத்தம் கிருமிகளை உருவாக்கும் என்பதால் நீண்ட நேரம் ஒரே நாப்கீனை வைத்திருப்பது நோய் தொற்றுகளை உருவாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
பெண்களே! மாதவிடாய் காலத்தில் இந்த 3 தப்பை மட்டும் செய்து விடாதீங்க
Reviewed by Author
on
February 08, 2020
Rating:

No comments:
Post a Comment