சீனா- வுஹானில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்த 480 பயணிகள் மாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து ஒன்பது நாட்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்த 480 பயணிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
உயிர்ப்பலி வாங்கும் கொரோனா வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுப்பது என்று மக்களுக்குச் சொல்லும் ஒரு பெரிய விளம்பர பிரச்சாரத்தை இங்கிலாந்து அரசு முன்னெடுத்து வரும் நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் தரப்பு முன்வைத்துள்ளது.
பிலிப்பைன்ஸில் நபர் ஒருவர் கொரோனா வியாதியால் மரணமடைந்ததே சீனாவுக்கு வெளியே இந்த பாதிப்பால் இறந்த முதல் நபர் என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 300 க்கு மேல் உயர்ந்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,000 ஐ கடந்துவிட்டன என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வுஹானில் இருந்து பிரித்தானியா திரும்பிய 84 பேர் தற்போது இரண்டாவது நாளாக கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் இதுவரை இருவருக்கு மட்டுமே கொரோனா வியாதி பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே பிரித்தானியாவுக்கு 9 நாட்களுக்கு முன்னர் வருகை தந்த 480 சீனத்துப் பயணிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.



சீனா- வுஹானில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்த 480 பயணிகள் மாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Reviewed by Author
on
February 03, 2020
Rating:
No comments:
Post a Comment