புற்றுநோயுடன் போராடி மீண்ட விவசாயி! 73 வயதில் அரசியல்,விழிப்புணர்வு
புற்றுநோயுடன் போராடி வெற்றிபெற்று விவசாயம், கட்சி பணி என்று பிசியாக இருக்கிறார் கேரளாவை சேர்ந்த 73 வயதான சி குஞ்சுபிள்ளை.கேரள மாநிலம் பத்தணம்திட்டா மாவட்டம் பெரும்புலிக்கல் பகுதியை சேர்ந்தவர் குஞ்சுபிள்ளை. 73 வயதான இவர் 10 வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்தியுள்ளார்.
தற்போது விவசாயம், அரசியல், புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்று தன் வேலையில் பிசியாக உள்ளார்.
விவசாய பணியில் மும்முரமாக உள்ள இவருக்கு மனைவி செல்லமா உறுதுணையாக இருந்து வருகிறார். மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வாழும் குஞ்சுபிள்ளை வாழை தோட்டம், மற்றும் காய்கறி தோட்டத்தை வீட்டின் அருகிலேயே அமைத்துள்ளார்.
மேலும், நெல் பயிரிட்டுள்ள குஞ்சுபிள்ளை, மாடு வளர்ப்பு கோழி வளர்ப்பு போன்ற வேலைகளையும் செய்து வருகிறார்.
இவருக்கு 43வயது இருக்கும்போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதல் 5வருடங்கள் தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பின் நோயின் தீவிரம் அதிகரிக்க, திருவனந்தபுரம் கேன்சர் சென்டரில் சிகிச்சைக்கு இணைந்துள்ளார்.
மருத்துவர்கள் கீமோதெரப்பி சிகிச்சை முறை பற்றி குஞ்சுபிள்ளைக்கு அறிமுகப்படுத்தினாலும், அவர் கதிர்வீச்சு முறையை மட்டும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்பின் சிறிது சிறிதாக உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 20 வருடங்களாக முறையான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் அவர், காரமான உணவுகள் எப்போதும் உண்பதில்லை.
மேலும், தேநீரில் மருந்து ஒன்று சேர்ந்து சுடாக்கி அதை ஆற வைத்து குடித்து வந்துள்ளார் அவர். மேலும், வாழைபழம் மற்றும் அரிசி உணவை தண்ணீர் வடிவில் உட்கொள்கிறார்.
வீட்டைவிட்டு வெளியில் செல்ல நேரிட்டால் தண்ணீர் மட்டு குடித்து அந்த நாளை சம்மாளிக்கிறார் குஞ்சிப்பிள்ளை.
2008ஆண்டு சற்று நிலமை மோசமாகியுள்ளது. அப்போது மேற்கொண்ட சில சிகிச்சையால் பற்களை இழந்துள்ளார் குஞ்சிபிள்ளை.
தற்போது அரோக்கியமாகவும், தனது விவசாய பணிகளிலும் மும்முரம் காட்டி புற்றுநோயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
புற்றுநோயுடன் போராடி மீண்ட விவசாயி! 73 வயதில் அரசியல்,விழிப்புணர்வு
Reviewed by Author
on
February 11, 2020
Rating:

No comments:
Post a Comment