சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வென்ற இலங்கை நட்சத்திரங்கள்! -
இலங்கை நட்சத்திரங்களான மலிங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் 2019ம் ஆண்டிற்கான Cricinfo விருதுகளை வென்று அசத்தியுள்ளனர்.
2019ம் ஆண்டிற்கான Cricinfo விருதுகளின் சிறந்த டெஸ்ட் மட்டையாளருக்கான விருதினை இலங்கை அணியின் குசல் பெரேரா பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக டர்பன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை அணி திணறி கொண்டிருந்தது.
அப்போது தனி ஒரு ஆளாக இறுதிவரை நின்று குசல் பெரேரா 153 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இது 2019 மட்டுமில்லாமல் எல்லா காலத்திலும் மிகப் பெரிய ஒன்றாக Cricinfo தெரிவித்துள்ளது.
அதேபோல நியூசிலாந்து அணிக்கெதிரானா டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், 2019ம் ஆண்டிற்கான சிறந்த பந்துவீச்சாளராக லசித் மலிங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற 3வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 126 ரன்களை மட்டுமே குவிந்திருந்தது.
இதனால் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றிபெற்று விடலாம் என அனைவரும் கணித்திருந்த வேளையில், சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்கா 4 ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனால் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வென்ற இலங்கை நட்சத்திரங்கள்! -
Reviewed by Author
on
February 11, 2020
Rating:

No comments:
Post a Comment