கொரோனா வைரஸ் பீதி... 83 பிரித்தானியர்கள் சிறப்பு மருத்துவமனையில்....
தனி விமானம் மூலம் சீனாவின் வுஹான் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 83 பிரித்தானியர்களும் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அடுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்.சீனாவின் வுஹான் நகரில் இருந்து கிளம்பிய விமானம் நீண்ட 12 மணி நேர பயணத்தின் பிறகு உள்ளூர் நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பிரித்தானிய வான்படை விமான தளத்தில் தரையிறங்கியுள்ளது.
குறித்த விமானத்தில் 83 பிரித்தானியர்களும் ஐரோப்பிய ஒன்றைய நாடுகளைச் சேர்ந்த 27 பேரும் இருந்துள்ளனர்.
83 பிரித்தானியர்களையும் உடனடியாக சிறப்பு பேருந்து மூலம் விர்ரலில் உள்ள அரோவ் பார்க் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி, ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த வாமோஸ் விமான ஊழியர்களும் முன்னெச்சரிக்கையாக இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே சீனா அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இதுவரை கொரோனா வியாதிக்கு 213 பேர் மரணமடைந்துள்ளதாகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,692 என அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஸ்வீடனில் முதல் பாதிப்பை கண்டறிந்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கொரோனா வியாதிக்கு இலக்காகியுள்ள நாடுகளின் எண்ணிக்கை 24 என தகவல் வெளியாகியுள்ளது.




கொரோனா வைரஸ் பீதி... 83 பிரித்தானியர்கள் சிறப்பு மருத்துவமனையில்....
Reviewed by Author
on
February 01, 2020
Rating:
No comments:
Post a Comment