ஐரோப்பிய கால்பந்து அணியில் இந்திய வீராங்கனை! -
இவர், பார்வர்ட்டில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் பல வெற்றிக்கு காரணமான இவர், 18மாத ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த பாலதேவி, இந்திய அணியில் 58ஆட்டங்களில் 52கோல் அடித்தவராவார்.
இது குறித்து அவர் பேசுகையில், “15வயதில் இருந்து இந்திய தேசிய அணியில் ஆடிவருகிறேன். ஐரோப்பிய லீக்கில் ஆட வேண்டும் என்பது எனது கனவு. அது தற்போது நனவாகி உள்ளது.
ரேஞ்சர்ஸ் அணியில் விளையாடுவது பெருமையாக கருதுகின்றேன். அந்த அணியில் பெற்ற ஒரு வார பயிற்சி தெற்காசிய போட்டில் சிறப்பாக ஆட உதவியது.
இந்த வாய்ப்பு இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு ஊக்கமாக அமையும். பிஃபா 17வயது மகளிர் உலகக் கோப்பையில் ஆடவுள்ள வீராங்களைகள் கடினமாகவும் நாட்டுக்காவும் சிறப்பாக ஆட வேண்டும்” என்றார்.

ஐரோப்பிய கால்பந்து அணியில் இந்திய வீராங்கனை! -
Reviewed by Author
on
February 01, 2020
Rating:
No comments:
Post a Comment