அண்மைய செய்திகள்

recent
-

சீன வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு பதிலாக ரோபோக்கள் கடமையில்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்குள்ள வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு பதிலாக ரோபோக்களை வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் கடும் வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலால் வைத்தியசாலைகளில் சனம் நிரம்பி வழிகிறது.
பல்வேறு வைத்தியசாலைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உகான் நகரில் 9 நாளுக்குள் சீன அரசாங்கம் கட்டி முடித்துள்ளது. மேலும், வைத்தியசாலைகளில்  அமைக்க அரசாங்கம் வேலை நடைபெற்று வருகிறது.


வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வின்றி வேலை செய்து வருகிறார்கள். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், குடும்பத்தினரை பிரிந்து பணியாற்றும் இவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

இதனால் இவர்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு பதில் ரோபோக்களை வேலையில் ஈடுபடுத்தப்படுத்தியுள்ளனர். நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை தாதியர்கள் வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சீன வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு பதிலாக ரோபோக்கள் கடமையில். Reviewed by Author on February 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.