எழுவைதீவு பாடசாலை அபிவிருத்திக்கு நிதியொதுக்கிய சிறீதரன் எம்.பி -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கடந்த ஆண்டில் மாத்திரம் 107 இலட்சம் ரூபாய் எழுவைதீவுப் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை இரோனியஸ் தெரிவித்துள்ளார்.
எழுவைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்தில் நாடாளுமன்றஉறுப்பினரின் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவின் திறப்பு விழாவும் 2020ம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வும், பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறுகூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேசம் தனித்தீவாக இருக்கிறது. இங்குள்ள எமது மக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதை அனைத்து தரப்பினரும் நன்கு அறிவார்கள். எமது மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு 1 கோடியே 7 இலட்சம் ரூபாய் கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி கூறுகின்றோம்.
பாடசாலைகள் மைதானங்கள், தேவாலயங்கள், வீதிகள் போன்ற வற்றுக்கே நாடாளுமன்ற உறுப்பினரின் ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

Reviewed by Author
on
February 04, 2020
Rating:

No comments:
Post a Comment