மாஸ்டர் படத்திற்காக இப்படி ஒரு செட் போடப்படுகிறதா? தமிழ் சினிமாவில் முதல் முறை..
விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கும் மாஸ்டர் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னை, கர்நாடகா, நெய்வேலி என பல இடங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் கலை இயக்குனர் அளித்துள்ள பேட்டியில் மாஸ்டர் படத்திற்காக ஒரு மெட்ரோ ட்ரெயின் செட் போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ரயிலுக்கு உள்ளே இருப்பது போல ஒரு செட்டும், வெளியில் இருப்பது போல ஒரு செட்டும் போடப்பட்டுள்ளதாம்.
உண்மையான மெட்ரோ ரயிலில் ஷூட்டிங் நடத்த பல சிக்கல்கள் இருப்பதால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்திற்காக இப்படி ஒரு செட் போடப்படுகிறதா? தமிழ் சினிமாவில் முதல் முறை..
Reviewed by Author
on
February 23, 2020
Rating:

No comments:
Post a Comment