நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் பாலை மீன்,கவட்டி வளர்ப்புத்திட்டம் தொடர்பில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆராய்வு-படம்
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் நானாட்டான் பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (11) நீர் உயிர் வளர்ப்பு அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த சந்திப்பின் போது சமூக மட்ட அமைப்புக்கள், கடற்தொழில் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இச் சந்திப்பில் தேசிய நீர் வழங்கல் ஆராய்ச்சி நிலையத்தின் தவிசாளர் பேராசிரியர் அ.அழகையா நவரட்ணராஜா கலந்து கொண்டார்.
இதன் போது அப்பகுதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கை விடப்பட்ட நிலையில் உள்ள நீர் உயிர் வளர்ப்பு தொடர்பான மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
குறிப்பாக பாலைமீன் வளர்ப்புத்திட்டம், கவட்டி வளர்ப்புத்திட்டம் போன்றவற்றில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன் போது தேசிய நீர்வழங்கல் ஆராய்ச்சி முகவரகத்தின் தவிசாளர் பேராசிரியர் அழகையா நவரட்ணராஜா அவர்கள் இத்திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக தாங்கள் அதிக அக்கரை செலுத்துவதாகவும் உயிர் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக 11 பயனாளிகளுக்கு மீன் குஞ்சு வளர்ப்பதற்கான உதவிகள் வழங்கப்பட இருப்பதாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் உயிர் வளர்ப்பு தொடர்பில் பொது மக்களுக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அப்பகுதியின் பங்குத்தந்தை அருட்பணி ஜீட் குரூஸ் அடிகள், அச்சங்குளம் கிராம சேவகர் அன்று ப்ளசிடஸ் மார்க், பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார், பிரதேசசபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, கடற்தொழில் உதவிப்பணிப்பாளர், உள்ளிட்ட அனைத்து துறைசார் அதிகாரிகளின் பங்கு பற்றலுடன் தீர்வுகாணப்படும் எனவும் தெரிவித்தார்.
சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார், கிராம அலுவலர் அன்று ப்ளசிடஸ் மார்க், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செபமாலை வினோத் மற்றும் நிர்வாக உறுப்பினர்களான சூசை சசிக்குமார் கிஸ்மின் குரூஸ், சந்தியோகு அன்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கவட்டி வெளிநாடுகளில் அதிக கேள்வி உள்ள புரதச் சத்து நிறைந்த உணவு வகை என்பதனால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கவட்டி வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் பாலை மீன் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அதிக கேள்வியுள்ள மற்றும் சுவையான மீன்வகை என்பதனால் இம் மீன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 12, 2020
Rating:

No comments:
Post a Comment