பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! கூட்டமைப்பு -
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 14வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் கலந்துக்கொணண்டதன் பின்னர் தமிழக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடி சுமூக தீர்வு காண்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் இலங்கையின் 72வது சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமை தமிழர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி உள்ளிட்ட பல வெளிநாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! கூட்டமைப்பு -
Reviewed by Author
on
February 11, 2020
Rating:

No comments:
Post a Comment