மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு விருதுகள்-வட மாகாண தேசிய நிர்மாணிகள் சங்க விருது வழங்கும் நிகழ்வு-படங்கள்
தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை10-02-2020 மாலை 7 மணியளவில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
-மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாண கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் வடமாகாண கிளையின் 2019 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜ்,
விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-மேலும் அரச திணைக்கள அதிகாரிகள்,வடமாகாணத்தைச் சேர்ந்த நிர்மாணத்துறை ஒப்பந்தகாரர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
-இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வடமாகாண தேசிய நிர்மாணிகளுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த றேமன் குரூஸ்(டிலக்ஸ்) ,பி.வி.டக்ஸன் ஆகிய இரண்டு தேசிய நிர்மாணிகளுக்கும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாண கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் வடமாகாண கிளையின் 2019 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜ்,
விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-மேலும் அரச திணைக்கள அதிகாரிகள்,வடமாகாணத்தைச் சேர்ந்த நிர்மாணத்துறை ஒப்பந்தகாரர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
-இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வடமாகாண தேசிய நிர்மாணிகளுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த றேமன் குரூஸ்(டிலக்ஸ்) ,பி.வி.டக்ஸன் ஆகிய இரண்டு தேசிய நிர்மாணிகளுக்கும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு விருதுகள்-வட மாகாண தேசிய நிர்மாணிகள் சங்க விருது வழங்கும் நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
February 11, 2020
Rating:

No comments:
Post a Comment