விஜய் ரசிகர்கள் 163 நாட்களாக செய்து வரும் விஷயம்,
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை தனது கடின உழைப்பினால் சம்பாதித்து வைத்துள்ளார்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். விரைவில் இப்படத்தில் முழு இசையும் வெளிவர காத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளிவரும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தளபதி விஜய் தனது நடிப்பையும் தாண்டி பல நல்ல விஷயங்களை தமிழக மக்களுக்கு செய்து வருகிறார்.
இவரை போலவே இவரது ரசிகர்களும் தங்களால் முடிந்த வரை மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
அதில் ஒன்று தான் இலவச உணவு விஷயம். இது ஆரம்பித்து இன்று முதல் சுமார் 163 நாட்கள் ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதை போல் வேறு எந்த ஒரு நடிகர்களின் ரசிகர்கள் செய்யாத ஒரு விஷயம் என்று சமூக வலைத்தளங்ககளில் இந்த விஷயத்தை புகைப்படத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் 163 நாட்களாக செய்து வரும் விஷயம்,
Reviewed by Author
on
March 09, 2020
Rating:

No comments:
Post a Comment