பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரிப்பு -
கொரோனா வைரஸ் தாக்குதலானாது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தாக்குதலுக்குள்ளானவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்னை தடுக்கும் முயற்சியில் உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு நிபுணர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணி (உள்ளூர் நேரப்படி) நிலவரப்படி, பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 64 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் நாட்டின் மொத்த நோய்த்தொற்று 273 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மொத்தம் 23,513 பேருக்கு இந்த நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
வைரஸ் தாக்குதலால் 100,000 இறப்புகளை பிரித்தானியா சந்திக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்திருத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரிப்பு -
Reviewed by Author
on
March 09, 2020
Rating:

No comments:
Post a Comment