மன்னார் சிறப்பாக இடம் பெற்ற மன்னல்-2019 நூல் வெளியீட்டு விழா...படங்கள்
2020 ஆம் ஆண்டுக்கான கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது மன்னார் நகர் பிரதேச செயலாளாரும் மன்னார் பிரதேச கலாச்சார பேரவையின் தலைவருமான திரு.ம.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 10-03-2020 நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலுள்ள கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் வருட வருடம் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் வெளியிடப்படும் மன்னல் -2019 நூலானது வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் உட்பட மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலாமன்ற பிரதிநிதிகள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் மாதர் ஒன்றிய தலைவிகள் பல்தரப்பட்ட கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் இடம்பெற்ற கலைஞர் ஒன்று கூடலின் போது 2020 ஆண்டுக்கான புதிய கலாச்சார பேரவை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ள காலச்சார விழாவில் வெளியிடப்படவுள்ள மலர் குழுவும் தெரிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் இவ்வருடம் இடம்பெற உள்ள கலாச்சார நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
March 11, 2020
Rating:

No comments:
Post a Comment