அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவால் 24 மணி நேரத்தில் 41 லிருந்து 148 ஆக அதிகரித்த உயிர்பலி: இத்தாலி அமைச்சர் தகவல் -


இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 148 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் நோயால் (COVID-19) இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 41-லிருந்து 148 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,800 ஐ தாண்டியுள்ளது என்று தேசிய சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி வியாழக்கிழமை தெரிவித்தார்.

குணமடைந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 138-லிருந்து 414 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் அனைவரும் 66 முதல் 94 வயதுடையவர்கள்.
மீண்டவர்கள், இறந்தவர்கள் உட்பட COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,858 ஐ எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 101,955 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,466 ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், சுமார் 56,123 பேர் மீண்டுள்ளனர்.
முன்னதாக னாவில் COVID-19 க்கு எதிரான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் பெரும்பாலும் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என்று சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துணை மந்திரி சூ நான்பிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் 24 மணி நேரத்தில் 41 லிருந்து 148 ஆக அதிகரித்த உயிர்பலி: இத்தாலி அமைச்சர் தகவல் - Reviewed by Author on March 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.