மன்னார் மாவட்டம் 3வது நாளகவும் முடக்கம்-மக்களின் வீடுகளில் கையிருப்பில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் முடிந்ததால் மக்கள் அவதி.
மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஆதரவு வழங்கி வருகின்ற போதும் மூன்றாவது நாளாக இன்று (23) திங்கட்கிழமை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல் படுத்துவதற்கு முன்னர் மக்கள் கொள்வனவு செய்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மூன்றாது நாளான இன்றைய தினத்துடன் முடிவடைந்துள்ளது.
இதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினால் நாளாந்த கூலி தொழிலுக்குச் செல்லும் குடும்பஸ்தர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த ஊரடங்குச் சட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை(24) காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
-இன்றைய தினம் திங்கட்கிழமை காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுகின்றது.
மன்னார் பகுதியில் மக்கள் அவசிய தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.எனினும் தனிiயாக சென்று வருபவர்களிடம் முகக்கவசத்தை அணிய பொலிஸார் பணிப்புரை விடுத்துள்ளனர்.மேலும் மாவட்டத்தில்
பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல் படுத்துவதற்கு முன்னர் மக்கள் கொள்வனவு செய்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மூன்றாது நாளான இன்றைய தினத்துடன் முடிவடைந்துள்ளது.
இதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினால் நாளாந்த கூலி தொழிலுக்குச் செல்லும் குடும்பஸ்தர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த ஊரடங்குச் சட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை(24) காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
-இன்றைய தினம் திங்கட்கிழமை காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுகின்றது.
மன்னார் பகுதியில் மக்கள் அவசிய தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.எனினும் தனிiயாக சென்று வருபவர்களிடம் முகக்கவசத்தை அணிய பொலிஸார் பணிப்புரை விடுத்துள்ளனர்.மேலும் மாவட்டத்தில்
பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டம் 3வது நாளகவும் முடக்கம்-மக்களின் வீடுகளில் கையிருப்பில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் முடிந்ததால் மக்கள் அவதி.
Reviewed by Author
on
March 24, 2020
Rating:

No comments:
Post a Comment