வடக்கு மக்கள் மீது அதிக கரிசனை செலுத்துங்கள்! அரசிடம் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை -
தற்போதைய அரசாங்கமானது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் வடக்கு மக்கள் மீது அதிக கரிசனை செலுத்த வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்பொழுது உலகம் பூராகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கமானது இலங்கையிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக வடக்குமாகாணத்தில் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். அன்றாட உழைப்பினை மேற்கொண்டு வாழ்ந்துவரும் குடும்பங்களாக அதிக குடும்பங்கள் காணப்படுகின்றன.
எனவே இன்றைய தினத்திலிருந்து இரு நாட்கள் நாடுபூராகவும் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
வடபகுதி மக்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்து பல இன்னல்களை அனுபவித்து வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாக காணப்படுகின்றார்கள்.
எனவே தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமானது வடக்கு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மக்கள் மீது அதிக கரிசனை செலுத்துங்கள்! அரசிடம் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை -
Reviewed by Author
on
March 21, 2020
Rating:

No comments:
Post a Comment