கொரோனா தொற்று தொடர்பில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் -
இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 10,030 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 244,517 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமது நாட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சுவிற்சர்லாந்து நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பல விழிப்புணர்வு விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் என விரிவாக பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போதைய சூழலில் உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஆகவே சுவிஸ் மக்கள், அரசாங்கம் வெளியிடும் தகவல்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
புதிய கொரோனா வைரஸ் - இவ்வாறு எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்




கொரோனா தொற்று தொடர்பில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் -
Reviewed by Author
on
March 21, 2020
Rating:
No comments:
Post a Comment