ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! யாழில் சம்பவம் -
யாழ்ப்பாணம் கட்டுவன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா (வயது-30) என்ற பெண் தனது முதலாவது பிரசவத்தின் போது நான்கு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்றாந் திகதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் மூன்று ஆண் குழந்தைகளையும் மற்றும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த நான்கு குழந்தைகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குழந்தைகளும்,தாயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! யாழில் சம்பவம் -
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment