ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் 1,375 வீடுகள்!
யாழ் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள காணி இல்லாத இடம்பெயர்ந்த 44 குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக்கொண்டு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கென 32.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வடமாகாணத்திற்கென 1375 வீடுகளை அமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ஓரு மில்லியன் பெறுமதியான வீடுகளை வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தெரிவு நடைபெறுகிறது.
5 மாவட்ட செயலகங்களில் இருந்து 550 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு விபரங்கள் அடங்கிய பட்டியல் ஏற்கனவே அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அடுத்து வரும் சில தினங்களுள் மிகுதி விபரங்களும் பூர்த்திசெய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 44 குடும்பங்களை மீள குடியமர்த்த தேவையான காணிகளை பெற்றுக்கொண்டு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கென ரூபா 32.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் 1,375 வீடுகள்!
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment