கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சிறந்த சிகிச்சை: இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு -
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் விஷால் ராவ் என்பவரே குறித்த புதிய முயற்சியை கண்டறிந்தவர்.
இந்த புதிய சிகிச்சை முறையானது இந்த வார இறுதிக்குள் பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
நோயெதிர்ப்பு மண்டலம் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும்.
இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடுகிறது. ஆனால் இந்த மருந்து கொரோனா வைரஸின் தடுப்பூசி அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம் என கூறியுள்ள அவர்,
இந்த ஆய்வில் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராகும் என்று நம்புகிறோம் என்றும் மருத்துவர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சிறந்த சிகிச்சை: இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
March 29, 2020
Rating:

No comments:
Post a Comment