இலங்கையிலிருந்து திரும்பியதும் தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தி: மூதாட்டியின் குரல்வளையை கடித்து கொலை
இந்தியா மாநிலமான தமிழகத்தில் தேனி மாவட்டத்தினைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் சமீபத்தில் இலங்கை சென்று வந்துள்ளார்.
கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். வீட்டில் தனிமையாக இருந்ததால், மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த மணிகண்டன், தனது ஆடைகளைக் கழட்டி போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடத் தொடங்கியுள்ளார்.
அருகில் இருக்கும் பக்தசேவா என்ற தெருவிற்குள் ஓடிய இளைஞர், ஒரு வீட்டின் முன்பு படுத்திருந்த நாச்சியம்மாள்(90) என்ற பாட்டியின் கழுத்தினைக் கடித்துள்ளார். ரத்தம் சொட்ட வலியால் துடித்த பாட்டியினைக் காப்பாற்ற வந்தவர்களையும் கடிப்பதற்கு முயன்றுள்ளார் மணிகண்டன்.
பின்பு அங்கிருந்தவர்கள் மணிகண்டனைக் கட்டிப்போட்டுவிட்டு முதியவரை அங்கிருந்த அரசு மருத்துவமனையில் தீவிர பிரிவில் அனுமதித்துள்ளனர். ஆனால் குறித்த பாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டவர் ஆவேசம் அடைந்து கடித்தால், பாட்டி உயிரிழந்த சம்பவம் தேனியில் அதிர்ச்சியையும் மேலும் பீதியையும் கிளப்பி உள்ளது.
தனிமைப்படுத்தப்படுதல் என்பது ஒரு தண்டனை என்று சிலர் நினைத்து கொள்கிறார்கள். சிலரோ அதனை அவமானமாக நினைக்கிறார்கள்.
நோயினைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுவது மட்டுமின்றி தனிமைப்படுத்துதல் சம்பந்தமான விழிப்புணர்வினையும் நம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டியதும் தற்போது அவசியமாகிறது.
இலங்கையிலிருந்து திரும்பியதும் தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தி: மூதாட்டியின் குரல்வளையை கடித்து கொலை
Reviewed by Author
on
March 29, 2020
Rating:

No comments:
Post a Comment