மனித குலத்தின் எதிரி! கொரோனாவிற்கு புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு -
அந்த அமைப்பின் தலைவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக 9 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலக நாடுகளுக்கு கொரேனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து அதன் அபாயகர தன்மைக்கு அமைய COVID-19 Pandemic என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் மனித இனத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என குறிக்கும் வகையில் ‘"enemy against humanity" - (மனித குல எதிரி)’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
மனித குலத்தின் எதிரி! கொரோனாவிற்கு புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு -
Reviewed by Author
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment