வடக்கில் மறு அறிவித்தல் வரும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள் -
கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரும்வரை இடைநிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சைவ ஆலயங்களின் நிர்வாகங்கள், தேவாலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
இதன்கீழ் போக்குவரத்தின் முன்னரும், பின்னரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கில் மறு அறிவித்தல் வரும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள் -
Reviewed by Author
on
March 16, 2020
Rating:

No comments:
Post a Comment