2020 டி-20 உலகக் கோப்பை நடக்கும் ஐசிசி தகவல் -
கொரோனா காரணமாக உலகளவில் அனைத்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்த சர்வதே கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.
வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நாடுகளில் உள்ளுர் கிரிக்கெட் போட்டி தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பை தொடர் குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில், ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரின் உள்ளுர் ஒருங்கிணைப்புக் குழு நிலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
2020 அக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் நவம்பர் 15ம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் 8 மைதானங்களில் டி-20 உலகக் கோப்பை தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட படி தொரை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இச்செய்தி உலகெங்கிலும் உள்ள டி-20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
2020 டி-20 உலகக் கோப்பை நடக்கும் ஐசிசி தகவல் -
Reviewed by Author
on
March 21, 2020
Rating:

No comments:
Post a Comment