இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் நாடாளுமன்றம்! வர்த்தமானியில் கோட்டாபய ஒப்பம் -
இன்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கையொப்பமிடப்பட்ட வர்த்தமானி அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் நாடாளுமன்றம்! வர்த்தமானியில் கோட்டாபய ஒப்பம் -
Reviewed by Author
on
March 02, 2020
Rating:

No comments:
Post a Comment