சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பரிதவிக்கும் கணேசபுரம் கிராம மக்கள்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் 'சேவா' கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்தும் இது வரை அடிப்படை வசதிகள் இன்றியும் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலையில் சொந்த வீடுகளில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டித்திட்டத்தின் அடிப்படையில் யுத்ததால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட, மாற்றாற்றல் கொண்டோர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிக்கு குறித்த பகுதியில் காட்டு பகுதி ஒன்றை துப்பரவு செய்து இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.
இருப்பினும் வீடுகள் ஒழுங்கான முறையில் அமைக்கப்படத காரணத்தால் தற்போது அனேகமான வீடுகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது.
அது மாத்திரம் இன்றி அடிப்படை வசதிகளான போக்குவரத்து வீதிகள் வைத்திய சாலை என எதுவுமே கடந்த 10 வருடங்கள் கடந்த நிலையில் வழங்கப்படவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரத்தினை உடனடியாக மக்களுக்கு வழங்குமாறு மாகாண காணி ஆணையாளரினால் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இது வரை வீடுகளுக்கான காணி ஆவணங்களோ உறுதி பத்திரங்களோ பிரதேச செயலகத்தினால் இது வரை வழங்கப்படவில்லை.
இவை தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மக்களை மதிக்காது செயற்படுவதாகவும் இந்திய வீட்டு திட்டம் கணேசபுரம் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாகவும் மக்களுக்கான காணி உரிமைகள் தொடர்பாக இன்றைய தினம் (1) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னால் கிழக்கு மாகாண காணி ஆணையாளரும் காணி தொடர்பான நிபுனத்துவ ஆலோசகரும் காணி விசேட மத்தியஸ்தக சபையின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளருமான மு.குருநாதன் ஊடாக விசேட விளக்கமளிக்கும் கூட்டம் இடம் குறித்த கிராமத்தில் இடம் பெற்றது.
குறித்த மக்களின் பிரச்சினைகளை தொடர்சியாக அலட்சியம் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வது தொடர்பாகவும் அதே நேரத்தில் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாகவும் மக்களின் முடிவும் பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
March 02, 2020
Rating:

No comments:
Post a Comment