சிறையில் வாடும் அரசியல் கைதிகளை உலகின் ஆபத்தான சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பொது மன்னிப்பின் விடுதலை செய்ய வேண்டும்-சட்டத்தரணி டினேஸன்
உலகம் முழுவதும் கொரானா வைரசின் தாக்கம் பாரிய உயிர் சேதத்தினையும் பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து அரச நிருவனங்களும் முடக்கப்பட்டு உள்ளது.
இவ் வேளை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். சிறைசாலைகளில் நெருக்கமாக பல எண்ணிக்கையான கைதிகள் இருந்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவருக்கு தெற்று ஏற்பட்டால் கூட அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும். கைதிகள் சிறைசாலைகளில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பலமிழந்தவராகவே காணப்படுவார்கள்.
அதுமாத்திரமில்லாது பல ஆண்டுகளாக எந்தவொரு விசாரணையும் இல்லாது பல அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இவ் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுகின்றார்கள்.
இந்த ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என தமிழரசு கட்சியில் இளைஞர் அணி உப தலைவரும் சட்டத்தரணியுமான டினேஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ் வேளை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். சிறைசாலைகளில் நெருக்கமாக பல எண்ணிக்கையான கைதிகள் இருந்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவருக்கு தெற்று ஏற்பட்டால் கூட அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும். கைதிகள் சிறைசாலைகளில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பலமிழந்தவராகவே காணப்படுவார்கள்.
அதுமாத்திரமில்லாது பல ஆண்டுகளாக எந்தவொரு விசாரணையும் இல்லாது பல அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இவ் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுகின்றார்கள்.
இந்த ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என தமிழரசு கட்சியில் இளைஞர் அணி உப தலைவரும் சட்டத்தரணியுமான டினேஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறையில் வாடும் அரசியல் கைதிகளை உலகின் ஆபத்தான சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பொது மன்னிப்பின் விடுதலை செய்ய வேண்டும்-சட்டத்தரணி டினேஸன்
Reviewed by Author
on
March 22, 2020
Rating:

No comments:
Post a Comment