அண்மைய செய்திகள்

recent
-

சிறப்புத் திரைப்படப்பயிற்சிப்பட்டறை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது


கொரோனா தீநுண்மி (Corona-19) ஊடக அறிக்கை


‘பட்டறை’ அமைப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையோடு இணைந்து எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை சிறப்புத் திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடாத்தவிருந்தது நீங்கள் அறிந்ததே. இதற்கான ஊடக அறிக்கை பெப்ரவரி 16ம் திகதி அன்று யாழ் ஊடக அமையத்தில் வெளியிடப்பட்டது. இச் சிறப்புத் திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 17ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை ‘பட்டறை’ இணையத்தளம் (paddarai.org) ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் கலந்து கொள்வதற்கு ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தார்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல் தாயகம் மற்றும் தமிழகத்திலிருந்து வளவாளர்களாகவும் பயிற்றுவிப்பாளர்களாகவும் கலந்து சிறப்பிக்க இருந்தவர்களும் மிக ஆர்வத்துடன் இருந்தமை இதனை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் எமக்கு மேலும் உற்சாகம் அளித்தது.

இருப்பினும் தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனா தீநுண்மியின் (Corona-19) அச்சுறுத்தலால் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமைய, மாணவர்கள், வளவாளர்கள் மற்றும் அனைவரதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இச் சிறப்புத் திரைப்படப் பயிற்சிப் பட்டறை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் இக்கட்டான வேளையில், நாம் அனைவரும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைப்படி சுத்தமாகவும் எச்சரிக்கையுடனும் செயற்படுவது மட்டுமன்றி, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமலும் வதந்திகளைப் பரப்பாமலும் சமூக அக்கறையுடன் செயற்பட்டு இத் தீநுண்மியை அகற்றும் இச் சிரமதானத்தில் கை கோர்ப்போம்.

மே மாதம் இறுதிக்குள் நிலைமைகள் வழமைக்குத் திரும்புமாயின், இம் முடிவு மறு பரிசீலிக்கப்பட்டு மறு அறிக்கை எமது இணையத்தளத்தில் வெளியிடுவது மட்டுமன்றி, இவ்வாறு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்படும்.
இவ்வண்ணம்,
‘பட்டறை’ நிர்வாகம்
15. மார்ச் 2020

சிறப்புத் திரைப்படப்பயிற்சிப்பட்டறை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது Reviewed by Author on March 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.