அண்மைய செய்திகள்

recent
-

'மன்னார் பிரிமீயர் லீக்' உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி தற்காலிகமாக இடை நிறுத்தம்.

'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவிப்பு.
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட தற்போது இடம் பெற்ற வருகின்ற 'மன்னார் பிரிமீயர் லீக்' உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை(16) ஊடகங்களுக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய  'கொரோனா வைரஸ்' தாக்கம் தற்போது இலங்கையையும் தாக்கியுள்ளது.இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளதோடு,மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை தடை செய்யவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைவாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பாக இடம் பெற்று வந்த 'மன்னார் பிரிமீயர் லீக்' உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி  16-03-2020 திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மறு அறிவித்தல் வரை குறித்த சுற்று இடை நிறுத்தப்பட்டுள்ளது.

 இயல்பு நிலை திரும்பிய பின் குறித்த சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்படும்.

இதற்கு அனைத்து உதைபந்தாட்ட கழகங்களும், உரிமையாளர்களும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.என அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட   இடம் பெற்று வருகின்ற 'மன்னார் பிரிமீயர் லீக்' உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த பெப்பிரவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகியது.இது வரை 25 சுற்றுக்கல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'மன்னார் பிரிமீயர் லீக்' உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி தற்காலிகமாக இடை நிறுத்தம். Reviewed by Author on March 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.