பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குனருக்கு பிரான்சின் சீசர் விருதா? கோபித்துக்கொண்டு வெளியேறிய நடிகைகள் -
பிரெஞ்சு-போலந்து திரைப்பட இயக்குனரான ரோமன் போலன்ஸ்கி, 1977 ஆம் ஆண்டில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு சம்மந்தமாக 42 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தனது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து தண்டனை விதிக்க இருப்பதை அறிந்துகொண்டு அமெரிக்காவிலிருந்து, பாரீஸிற்கு தப்பி ஓடினார்.
இந்த வழக்கானது நிலுவையில் இருந்து வந்த நிலையில், 1975 ஆம் ஆண்டில் போலன்ஸ்கி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஆண்டு பெண் ஒருவர் குற்றம் சுமத்தினார்.

இதற்கு போலன்ஸ்கி மறுப்பு தெரிவித்தாலும் கூட, அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பு அணி திரண்டு போராட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் பாரிசில் நடைபெற்ற விழாவில், தனது 'An Officer மற்றும் a Spy' படத்திற்காக ரோமன் போலன்ஸ்கி சிறந்த இயக்கத்திற்காக பிரான்சின் சீசர் விருதை வென்றார்.
ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கிற்கு வெளியே பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவரது விருதை பெற யாரும் முன்வரவும் இல்லை.
இதற்கிடையில் விருது வழங்கியதும், 2000 களின் முற்பகுதியில் மற்றொரு பிரெஞ்சு இயக்குனர் தனது 15 வயதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்டனம் செய்த நடிகை அடீல் ஹெய்னல், பாதியிலேயே எழுந்து வெளியில் சென்றார்.
அவரை தொடர்ந்து பெண்கள் பலரும் அரங்கிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குனருக்கு பிரான்சின் சீசர் விருதா? கோபித்துக்கொண்டு வெளியேறிய நடிகைகள் -
Reviewed by Author
on
March 01, 2020
Rating:
No comments:
Post a Comment