அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய அமீரகத்தில் கார் விபத்தில் சிக்கி 3 தமிழர்கள் பலி!


ஐக்கிய அமீரகத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி 3 தமிழர்கள் பலியாகியிருப்பதாக இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் அல் ஐனி பகுதியில் நடந்த கார் விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியிருப்பதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இறந்தவர்கள் ராம்குமார் குணசேகரன் (30), சுபாஷ் குமார் (29) மற்றும் செந்தில் கலியபெருமாள் (36) எனவும், மூன்று பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் அபுதாபியின் முசாபாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அல் ஐன் நகரைச் சேர்ந்த சமூக சேவகர் சமத் பொம்தனம் கூறுகையில், "இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்தது. அவர்கள் சென்ற வாகனம், முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குணசேகரன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
"நாங்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் இணைத்து சம்மந்தப்பட்ட பணிகளை செய்து வருகிறோம். உடல்களை ஓரிரு நாட்களில் வீட்டிற்கு திருப்பி அனுப்புவோம் என்று நம்புகிறோம்." என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் கார் விபத்தில் சிக்கி 3 தமிழர்கள் பலி! Reviewed by Author on March 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.