‘ஒன்றாகப் போராடலாம்’.. கொரோனாவுக்கு எதிராக மக்களின் மனோதிடத்தை ஊக்கப்படுத்த பிராவோ வெளியிட்ட புதிய பாடல் -
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா இன்று 199 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் 28,238 பேர் பலியாகியுள்ள நிலையில், 6,14,073 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட், கால்பந்து உட்பட பல விளையாட்டு வீரரகள் சமூக ஊடகங்கள் வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர் மற்றும் பலர் நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பதிவில், மேற்கிந்திய வீரர் பிராவோ தனது கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பிரார்த்தனைகள்! ஒன்றாகப் போராடலாம் என பிராவோ தெரிவித்துள்ளார்.
3 நிமிட 31 வினாடி நீண்ட பாடலில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர், கைகளை தொடர்ந்து கழுவுதல், வீட்டில் தங்கி, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறார்.
‘ஒன்றாகப் போராடலாம்’.. கொரோனாவுக்கு எதிராக மக்களின் மனோதிடத்தை ஊக்கப்படுத்த பிராவோ வெளியிட்ட புதிய பாடல் -
Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment