காணமல் போகாதா கொரோனா….
காணமல் போகாதா கொரோனா….
வீசா ஏதும் இன்றி
விரும்பிய இடமெல்லாம் வருதடா
வீதிக்கு நீ போய்-விருந்தாளியென
வீட்டுக்கு கூட்டி வந்திராத கொரோனாவ
தள்ளியிரு தனித்திரு
விழித்துக்கொள் -எந்த
மொழியில் சொன்னாலும் கொரோனா
பலியெடுக்கும் கொரோனாதான்
வல்லரசுகளுக்கே
சிரசுல சம்மட்டி-கொரோனா
வைரஸ் வந்தா வெற்றி
முரசும் வீண் தானடா
வெட்டி விறாப்பு வேணாமடா
பெட்டிப்பபாம்பாய் வீட்டில்கிட
லூட்டியக்க பார்ட்டி போனா
பெட்டிக்குள் போயிடுவா வீணா
கட்டிப்பிடிக்காதே
கையெடுத்து கும்பிடு
வட்டிக்கு கொடுக்காதே
வறுமைக்கு தந்திடு
கிட்ட வராத
தொட்டுப்பேசாத
கட்டியணைக்காத
கைகுலுக்காத
சுட்டித்தனமா சுத்தாதா
சத்தமாய் இருந்தா பத்தாது
சத்தான உணவை சாப்பிடு
சனக்கூட்டத்தினை தவிர்த்திடு
இருக்கும் போது
இருவருக்குமிடையில்
இருக்கட்டும் 6அடி இடைவளி
இல்லையேல் இருக்கனும் இடுகாட்டில்
தானா வராதா கொரோனா-வந்தா
தனிய போகாது கொரோனா
மனிதன் மூலமே மனிதனுக்கு
மரணவலை விரிக்கும் கொரோனா
மறந்தா நீயும் மண்தானே
மனைவி பிள்ளைகள் அம்மா அப்பா
மச்சான் மாமா உறவுகள்-எல்லாம்
மரணத்திற்கு முன்னும் பின்னும் வரமுடியாது
மறந்திடாதே மனிதா…கொரோனா தொற்று
மனிதம் மட்டும்தான் வெல்லும் மனமிருந்தால்
சட்டம் போட்டு
தடுக்கமுடியாது
சாமர்த்தியமா திட்டம் போட்டு
சாவில் இருந்தா தப்பலாம்
விஞ்ஞானம் விழிபிதுங்க
விரும்பிய வாழ்வை வாழமுடியாமல்
வீட்டிற்குள்ளே விழிகலங்க
விமோசனம் கிடைக்கமா
கொத்துக்குண்டுக்குதப்பினா
கொரோனாவுக்கு தப்பமுயவில்லயை
கொத்துக்கொத்தாய்….
செத்துமடிகின்றோமே…..
காணமல்போன எம்முறவுகள்
கைதிகளாய் சிறையில்-நாம்
கதிகலங்கி நிற்க-நீயோ
கண்ணுக்கு தெரியாமல் வந்தாயே-கொரோனா
காணமல் போகாதா கொரோனா….
படைத்தவனைமறந்து
பணத்திற்காய் பம்மாத்துக்காட்டி
மார்புதட்டிய மனிததலைகளை
மண்டியிட வைக்கிறதே கொரோனா
அண்டசராசரங்களையும்
ஆளநினைக்கும்
அத்தனைதலைகளையும்
கண்டம் விட்டு கண்டம்வந்து-பாச
கயிறு வீசுதே கொரோனா
செவ்வாய்க்குடியேறிய விஞ்ஞானம்
வெறுவாய் சப்புகிறது இப்போது
நிலாவில் உலா வந்த விஞ்ஞானம்
இழவு விழுந்த உடலை என்ன செய்ய…
இது
சதியா...
விதியா...
எதுவானாலும்
மதியால் வெல்ல
மனிதமனங்கள் இணையட்டும்.
கவிஞர் வை.கஜேந்திரன்,BA
காணமல் போகாதா கொரோனா….
Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment