அரசின் உதவித் திட்டங்கள் மக்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் முன்பதாக கிடைக்கப் பெற வேண்டும்- எஸ்.வினோ நோகராதலிங்கம்.
காவல்துறை ஊரடங்குச் சட்ட காலப்பகுதிக்குள் அத்தியாவசிய உதவித் திட்டங்கள் யாருக்கு அவசியமானது என்பதனை அடையாளம் கண்டு உரிய முறையில் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் முன்பதாக அவர்களுக்கு கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29)விடுத்த ஊடக அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்துவதால் வைரஸ் தொற்றக்கு உள்ளாகுவது
முழுமையாக தடுக்க முடியா விட்டாலும் அரசாங்கத்தின் உத்தரவு ஓரளவுக்கேனும் வெற்றி அளித்துள்ளது என கூறி கொள்ளக்கூடியதாக உள்ளது.
மக்களும் நாட்டு நலனையும் மனித உயிர்களையும் மதித்து ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இருந்த போதும் ஊரடங்கு காரணமாக அன்றாடம் உழைத்து உண்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் ஊரடங்கு சட்டமோ அதற்கு ஒத்த சட்டங்களோ அமுலில் இருப்பதால் சுமார் 4 கோடி உயிர்கள் காப்பாற்றப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதே ஆய்வாராச்சிகள் 100 கோடி பேரின் தொற்றுகள் இவ் ஊரடங்கின் மூலம் தடுக்கப்படுவதாக கூறுகின்றன.
இவை மகிழ்ச்சியைத் தருகின்ற செய்திகளே. இருந்த போதும் எமது நாட்டைப் பொருத்தவரை வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட சாமானிய மக்களின், தொழிலாளர்களின் நிலை வேறாக இருக்கின்றது.
கையில் பணம் உள்ளவர்களுக்கு வங்கிகளும் வர்த்தக நிலையங்களும் தேவைப்படுகின்றது. கையில் பணம் இல்லாத அன்றாடக் கூலிகளிடம்
பணமும் இல்லை, பொருளும் இல்லை.
நோயினால் காவு கொள்வதற்கு முன்னர் பசியினால் இவர்கள் உயிர்கள் பறிக்கப்படும் அபாயம் கண்முன்னே தெரிகின்றது.
அரசாங்கம் அறிவித்த இடைக்கால நிவாரணம் 5 வீதம் கூட மக்களை சென்றடையவில்லை. வெறுமையான அன்றாட கூலி தொழிலாளர்கள் வாழ்வாதார வசதி இல்லாதவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான அத்தியாவசிய அவசர நிவாரண உதவிகளை முறையாக செய்து விட்டு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அமுல் படுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு சாதாரண சிகை அலங்கரிப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் தொழில் செய்ய முடியாது. நான்கு நாட்களுக்கு ஒரு தடவை 6 மணி நேரம் ஊரடங்கு தளவின் போது கிடைக்கும் வருமானம் மிக சொற்பமே.
தனித்த ஊழியர் ஒருவருடன் தங்கியிருக்கும் குடும்பத்தை பராமரிப்பது சுலபம் அல்ல.இதை விட வாடிக்கையாளர்களின் நோய் தொற்றுக்கு உளளாகும் மோசமான நிலை உள்ளது.
3 அடி தூரம் விலகி நிற்க அரசாங்கம் பணிக்கின்றது. எனினும் தொடுகை ஊடாகவே தொழில் செய்து வாடிக்கையாளர்களுடன் உறவைப் பேண வேண்டிய தொழிலாக ஒரு அவசிய பணியாக ஆபத்தான பணியாக செய்கின்றனர்.
சிகை அலங்கரிப்பு தொழிலாளர்கள் தொற்று ஏற்பட்டு விடுமோ என அஞ்சினாள் கடைகளை மூடி விட்டு வீட்டில் தான் முடங்கிக் கிடக்க வேண்டும்.
அவர்களுக்கூறிய வாழ்வாதாரம் என்ன? உழைத்தால் தான் ஊதியமும் உலையும் வைக்க வேண்டும் என்றால் உயிராபத்தை விடுத்து கடை திறந்து தொழிலில் ஈடுபடுவதை விடுத்து அவர்களுக்கு மாற்று வழி இல்லை.
இதனாலேயே இவர்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு ஊரடங்கு அறிவித்தலுக்கு முன்னரே அத்தியாவசியமான அவசர நிவாரணங்கள், கொடுப்பனவுகளை வழங்கி விட்டு அல்லது ஊரடங்கு காலத்தில் உதவிகள் வழங்க அரசாங்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மயிலின் கால்களை உடைத்து விட்டு ஆடச் சொல்லி கேட்க அரசாங்க முனையக் கூடாது. மாற்று ஏற்பாடுகளை தொழிலாளர்களுக்கும் அன்றாடம் கூலி தொழிலாளர்களுக்கும் இன்றியமையாதது.
-உலர் உணவு, நிவாரணப் பொருட்கள், நிதியுதவித் திட்டங்கள் யாருக்கு அவசியமானது என்பதனை அடையாளம் கண்டு உரிய முறையில் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் முன்பதாக அவர்களுக்கு கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment