கொரோனாவை தடுக்க ஒன்றிணையும் இந்தியா, இலங்கை உட்பட SAARC நாடுகள்!..
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை தடுக்க சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது, ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கொரோனாவை தடுக்க சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என மோடி டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது, இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டில்,
கொரோனாவை எதிர்கொள்வது அவசியமான ஒன்று, இந்திய பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம், அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார் என அறிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டில், மிகச் சிறப்பான ஆலோசனையை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. கொரோனா தொடர்பான வீடியோ கான்பரன்ஸிங் ஆலோசனையில் பங்கேற்க நாங்கள் தயார்.
எங்களின் சிறந்த தீர்வுகளை சக நாடுகளுக்கு தெரியப்படுத்துகிறோம். அவர்களிடம் இருந்தும் நாங்கள் கற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்' என்று கூறியுள்ளார்.
சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நோபளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை தடுக்க ஒன்றிணையும் இந்தியா, இலங்கை உட்பட SAARC நாடுகள்!..
Reviewed by Author
on
March 15, 2020
Rating:

No comments:
Post a Comment