அனைத்து விதிகளையும் அலட்சியப்படுத்தி கொரோனாவை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ட்ரம்ப்!
கைகுலுக்குவதையும், கட்டியணைப்பதையும் தவிருங்கள் என அத்தனை நாடுகளும் மாய்ந்து மாய்ந்து அறிவுரைக்கு மேல் அறிவுரையாக வழங்கிக்கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ட்ரம்ப், தன்னுடன் வந்திருந்த அத்தனை பேருடனும் கைகுலுக்கினார்.
ட்ரம்ப் மட்டுமின்றி, துணை அதிபர் Mike Pence, மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் குழுவின் உறுப்பினர்கள் என பேசவந்த அத்தனை பேரும் பாதுகாப்பு விதிகளை மீறினர்.

சிலர் ஒலிபெருக்கியை கைவைத்து உயரத்தை சரி செய்தனர்.வேறு சிலர், மேடையில் கைவைத்து சாய்ந்துகொண்டனர்.
சில நாடுகளில் மக்கள் ஒரு மீற்றர் தூரம் தள்ளி நிற்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பத்திரிகையாளர்களும், எந்த முன்னெச்சரிக்கை உணர்வும் இன்றி தோளோடு தோள் சாய்ந்துதான் அமர்ந்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்களில், Bruce Green என்பவர் மட்டுமே தன்னுடன் கைகுலுக்க வந்த ட்ரம்புக்கு கையைக் கொடுக்காமல், தனது முழங்கையை நீட்டினார்.
தற்போது கை குலுக்குவதற்கு பதில், ஒருவர் தனது முழங்கையை மற்றவர்களுடைய முழங்கையுடன் தட்டுவது, விரும்பத்தக்க வரவேற்கும் விடயமாக கருதப்படுகிறது.
ஓ, ஓகே, அது எனக்கு பிடித்திருக்கிறது, அது நல்லது என்று கூறியவாறே, தன் முழங்கையை நீட்டினார் ட்ரம்ப்.




அனைத்து விதிகளையும் அலட்சியப்படுத்தி கொரோனாவை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ட்ரம்ப்!
Reviewed by Author
on
March 15, 2020
Rating:
No comments:
Post a Comment