ஐ.நா. விவகாரம் பற்றி கூட்டமைப்பு அறிக்கை! சம்பந்தன் தெரிவிப்பு -
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியமை குறித்தும், அதைக் கண்டித்தும், இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை எதிர்த்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஜெனிவாக் கூட்டத் தொடரில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை பற்றியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பது மிகவும் கட்டாயம்.
எனவே, இது தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளோம்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐ.நா. விவகாரம் பற்றி கூட்டமைப்பு அறிக்கை! சம்பந்தன் தெரிவிப்பு -
Reviewed by Author
on
March 01, 2020
Rating:

No comments:
Post a Comment