நாம் தமிழர் கட்சி அவசர அறிவிப்பு! கொரோனாவை தடுக்க நடவடிக்கை -
அதில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மானுட குலமே போராடிக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கேற்ற விழிப்புணர்வும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பேரவசியமாகிறது.
அதன்பொருட்டு, வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிகழ்வுகளும், செயற்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதுவரை எந்தவொரு நிகழ்வையும் முன்னெடுக்க வேண்டாமென நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
உலகளவில் கொரேனாவிற்கு 11,554 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,78,557 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 பேர் பலியாகியுள்ளனர், 275 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
நாம் தமிழர் கட்சி அவசர அறிவிப்பு! கொரோனாவை தடுக்க நடவடிக்கை -
Reviewed by Author
on
March 22, 2020
Rating:

No comments:
Post a Comment