மன்னாரில்...விதிகளை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-படங்கள்
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் அடிப்படை பொருட்கள் சிலவற்றுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது
இருப்பினும் சில வர்த்தகர்கள் விலை குறைப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதேநேரத்தில் பொருட்களின் விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு கீழ் இயங்கிவரும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பொருட்களை பதுக்கி வைத்தல் விற்கமறுத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு மேலாக விற்றல் மேலும் பொருட்களின் விலையை விட அதிகமாக விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அதே நேரத்தில் இவ்வாறான சம்பவங்களால் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு 0232251977 அழைத்து தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளனர்.

Reviewed by Author
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment