உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஏற்பட்ட பின்னடைவு!
உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 72 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த ஆண்டும் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மேற்குறித்த பட்டியலில் 67 ஆவது இடத்திலிருந்த இலங்கை இவ்வாண்டு ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது.
அண்டை நாடான இந்தியா இந்தப் பட்டியலில் 141 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் காணப்படுகிறது.
சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகள், நாட்டில் இராணுவத்தின் செயற்பாடு ஆகியவற்றை அளவீடுகளாகக் கொண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் உலக நாடுகளின் அமைதி தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறது. ஆய்வின் முடிவில் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
163 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்திலிருந்த சிரியா தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.
குறித்த பட்டியலில் கடைசி ஐந்து நாடுகள் வரிசையில் தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகிய நாடுகளுள்ளன.
இதேவேளை, இந்தப் பட்டியலில் பூட்டான் 15 ஆவது இடத்தைப் பிடித்து தெற்காசிய நாடுகளில் அமைதி மிகுந்த நாடாக விளங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஏற்பட்ட பின்னடைவு!
Reviewed by Author
on
March 11, 2020
Rating:

No comments:
Post a Comment