கொரோனா அச்சுறுத்தல்... கூகிள் தமிழர் சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு விடுத்த கோரிக்கை -
உலகமெங்கும் உள்ள பல லட்சம் மக்களும் நிறுவனங்களும் நமது சேவையை நம்பியிருக்கும் காலகட்டம் இது எனவும் சுந்தர் பிச்சை தமது ஊழியர்களை நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த வார துவக்கத்தில் கூகிள் நிறுவனம் அதன் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டை ரத்து செய்தது,
மே மாதத்தில் சுமார் 7,000 பேர் கலந்துகொள்ள இருந்த மிக முக்கியமான மாநாட்டையே கூகிள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்தது.
இதுவரை சிறிதும் பெரிதுமான அனைத்து பிரச்னைகளின் போதும், உதவி கோரி உங்களிடம் வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள் என தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை,
ஆனால் தற்போதைய சூழல் நாம் இதுவரை எதிர்கொண்டதில் மிக முக்கியமானது எனவும் நினைப்புடுத்தியுள்ளார்.
உலகமெங்கிலும் உள்ள 120,000 கூகிள் ஊழியர்கள் எந்த நிமிடமும் தங்கள் குடியிருப்பில் இருந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என கோரியுள்ள சுந்தர் பிச்சை,
ஒவ்வொரு இரவும் பணி முடித்து குடியிருப்புக்கு செல்லும் ஊழியர்கள் தங்கள் மடிக்கணினியை குடியிருப்புக்கு தவறாமல் எடுத்துச் செல்லவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நோய் அறிகுறிகள் தென்பட்டால் அலுவலகம் செல்ல வேண்டாம் என நிதித்துறைத் தலைவர் ரூத் போரட் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் கண்காணிப்புக்கு என 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் மையம் ஒன்றை கூகிள் செயல்படுத்தி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல்... கூகிள் தமிழர் சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு விடுத்த கோரிக்கை -
Reviewed by Author
on
March 11, 2020
Rating:

No comments:
Post a Comment