100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் மரணம்! கொரோனாவால் நேர்ந்த அடுத்த சோகம்
கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது மனித குலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. மரணத்தின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 12 லட்சத்தை தாண்டிவிட்டது.
நவீன உலகிற்கு இந்த நோயை எதிர்த்து போராடுவதென்பது பெரும் சவாலாக உள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கான வருமான ஈட்டல் என்பது சிறிதும் இல்லை. ஊரடங்கு வேளையில் சினிமா உட்பட அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன.
சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் காலமாக ஹாலிவுட் சினிமாவில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
The Conversation, Nashville, Bananas,The Candidate உட்பட 100 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஆலென் கர்ஃபீல்ட்.
80 வயதான அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் மரணம்! கொரோனாவால் நேர்ந்த அடுத்த சோகம்
Reviewed by Author
on
April 11, 2020
Rating:

No comments:
Post a Comment