ஊரடங்கால் தவித்த 150 இலங்கை தமிழ் குடும்பத்தார்! நெகிழ்ச்சியான உதவியை செய்த சீமானின் நாம் தமிழர் கட்சி -
இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.
இதனால் பலரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர், முக்கியமாக தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பலர் பணிக்கு செல்ல முடியாததால் உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தினக் கூலிகளாக டிக்கெட் கேன்வாசர்கள், பஸ் பாடி கிளனர்கள், தூய்மை பணியாளர்கள் 8 பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சங்கம் சார்பில் தலா ரூ. 2000 நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யூ. கிளை செயலர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். சம்மேளன செயலாளர் வெள்ளத்துரை நிதியை வழங்கினார்.
கிளை தலைவர் ராஜா, பொருளாளர் கண்ணன், ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் சார்பாக மொட்டமலை இலங்கை முகாமில் வாழும் 150 குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வக்கீல் பிரபாகரன் தலைமையில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இக்காட்டான சூழலில் உணவு பொருட்கள் நிச்சயம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஊரடங்கால் தவித்த 150 இலங்கை தமிழ் குடும்பத்தார்! நெகிழ்ச்சியான உதவியை செய்த சீமானின் நாம் தமிழர் கட்சி -
Reviewed by Author
on
April 10, 2020
Rating:
No comments:
Post a Comment