அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் இருமினால் எத்தனை பேருக்கு பரவும் தெரியுமா?


பின்லாந்தை சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெறும் ஒரு இருமலால் கொரோனா பரவல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஒரு திகிலூட்டும் காணொளியால் விளக்கியுள்ளனர்.
பிரித்தானியா உள்ளிட்ட ஊரடங்கு அமுலில் இருக்கும் பல நாடுகளில் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் சமூக விலகல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்த சமூக விலகலும், கொரோனா பரவலை தடுக்க முடியாது என பின்லாந்தை சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திகிலூட்டும் வீடியோ மூலம் விளக்கியுள்ளனர்.
அதில், கொரோனா நோய் அறிகுறிகள் கொண்ட ஒருவர் இருமுகிறார், அதனால் வெளிப்படும் கிருமிகள் மொத்த வணிக வளாகத்திலும் பரவக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த ஆய்வில், இருமல், தும்மல், மற்றும் பேசுவதனால் வெளியாகும் மிகச் சிறிய சுவாசத் துகள்கள் காற்றில் எவ்வாறு பரவுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வீடியோவில் ஒருவர் இரும, அது உடனடியாக அங்குள்ள அனைவரையும் பாதிக்கும் வகையில் கிருமிகள் செயல்படுவதை காண்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் கொண்ட நபர் பொதுமக்கள் நடுவே இருமிவிட்டு கடந்து செல்லலாம். ஆனால் அந்த மிகச் சிறிய துகள்கள் அங்கிருக்கும் அனைவருக்கும் கொரோனாவை பரப்பி விடும் என்கிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள பேராசிரியர் Ville Vuorinen.
குறித்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.
கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் இருமினால் எத்தனை பேருக்கு பரவும் தெரியுமா? Reviewed by Author on April 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.