கொரோனா பாதிப்புக்கு சொத்து மதிப்பில் 1 சதவீதத்தை கொடுத்த மாற்றுத்திறனாளி! இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது விமர்சனம் -
2014 ஆசிய பாரா விளையாட்டு தொடரிலும், 2018 பாராலிம்பிக் தொடரிலும் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றவர் தான் இந்த சரத் குமார்.
மேலும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இவர் கொரோனா பாதிப்புக்கு ரூ.1,00,001 கொடுத்துள்ள நிலையில் தனது மொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அவரது சொத்து மதிப்பு ஒரு கோடி இருக்கலாம் என தெரிகிறது.
ஒரு கோடி சொத்து மதிப்பு கொண்ட ஒருவர் ஒரு லட்சம் அளிக்கும் போது பல கோடி சொத்து மதிப்பு கொண்ட முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவி செய்யும் வகையில் நிதி வழங்கவில்லை என ரசிகர்கள் குற்றம் சுமத்தி விமர்சித்துள்ளனர்.
சச்சின், கங்குலி, அஜின்க்யா ரஹானே, கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிப்பிற்கு உதவி செய்துள்ளனர்.
கோடிகளில் புரளும் மற்ற கிரிக்கெட் வீரர்களும் இது போல பல லட்சங்கள், கோடிகளை அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு சொத்து மதிப்பில் 1 சதவீதத்தை கொடுத்த மாற்றுத்திறனாளி! இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது விமர்சனம் -
Reviewed by Author
on
April 01, 2020
Rating:

No comments:
Post a Comment