கொரோனா: உலக நாடுகளின் அழுத்தம்.... 24 முக்கிய மருந்துகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் இந்தியா! -
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த ஒரு மாதமாக 24மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை வித்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேரியாவுக்கான hydroxychloroquine மருந்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், 24 மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடையை நீக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில், hydroxychloroquineமருத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால், அதை இந்திய மருத்துவர்கள் பரிந்துரைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், உலக நாடுகளில் இதுவரை கொரோனாவுக்கான முறையான மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனாலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த மருந்தை தங்கள் நாட்டிற்கு வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
உள்நாட்டு தேவைக்கான மருந்தின் அளவை உறுதி செய்த பின்னரே வெளிநாட்டிற்கு மலேரியாவுக்கான மருந்தை ஏற்று செய்ய முடிவு செய்ததாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அந்த மருந்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகவும், பிரேசில், ஸ்பெயின் போன்ற 7 நாடுகள் அடுத்தடுத்த பகுதிகளில் உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலமையிலான கூட்டத்தில், இது குறித்த இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், 24 மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதில், பாராசிட்டமல் மாத்திரைகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
கொரோனா: உலக நாடுகளின் அழுத்தம்.... 24 முக்கிய மருந்துகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் இந்தியா! -
Reviewed by Author
on
April 07, 2020
Rating:

No comments:
Post a Comment